
லண்டனில் திருமணம் செய்து 2 வருடங்களான இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீர் என உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
கிளிநொச்சி பளை பகுதியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் இரத்தப் புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்,
வடக்கில் யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் பல உதவிகளை செய்து வந்தவர் ஆவார்,
தனபாலசிங்கம் தர்சிகன் (வயது 31) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன,
இச்சம்பவம் அவரது நண்பர்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது,