
தமிழர் இல்லம் சுவிஸ் 19 ஆவது தடவையாக நடாத்தும் தமிழர் விளையாட்டுவிழா ஆகஸ்ட் 13 ஆம் 14 ஆம் நாட்களில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
அனைத்துலக ரீதியல் தமிழர்களை ஒருங்கிணைக்கும் போட்டி நிகழ்வாகவும் தமிழீழ கிண்ணத்துக்கான போட்டிகளில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல தமிழர் உதைபந்தாட்ட அணிகள் பங்கு கொள்ளவுள்ளனர்.
பிரான்சு நாட்டின் சார்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறை , ஈழத்தமிழர் உதைபந்தாட்டச்சம்மேளனத்தின் ஆதரவோடு இச் சிறப்புவாய்ந்த போட்டியில் தெரிவு வீரர்களைக்கொண்ட இரண்டு அணிகள் பங்கு பற்றுகின்றன. அவர்களுக்கான பயிற்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நேற்று 09.08.2022 அன்று சேர்ஜிபொந்துவாஸ் (95 மாவட்டத்தில் ) பலநாடுகளில் தெரிவுசெய்யப்பட்ட வீரர்களைக்கொண்ட தமிழீழ அணிக்கும், பிரான்சு முன்னணிக் கழக வீரர்களைக்கொண்ட தெரிவு அணிக்கும் மாலை 20.00 மணிக்கு நட்புரீதியான போட்டிகள் நடைபெற்றிருந்தன.
நாளை 11.08.2022 வியாழக்கிழமை மாலை சேர்ஜிபொந்துவாஸ் ( 95) மாவட்டத்தில் தமது தேசவிடுதலையின் சுதந்திரத்திற்காக, அங்கீகாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் காஸ்மீர் நாட்டுக்கும், தமிழீழ தேசத்துக்குமான சிநேகபூர்வமான உதைபந்தாட்டப்போட்டி மாலை 7.30 மணிக்கு Stade Salif keita avenue de la plain des sports 95800 cergy என்னும் மைதானத்தில் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதில் பல அரசியல் பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டும் சிறப்பிக்கவுள்ளனர். அங்குவாழும் பிரதேச மக்கள் இப்போட்டி நிகழ்வில் பங்குகொள்ளும் வீரர்களுக்கு உற்சாகத்தை வழங்கத் தயாராகிக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது. ஏனைய மாவட்டங்களில் இருக்கு தமிழ் ஆர்வலர்களை இப்போட்டிக்கு வந்து ஆதரவு கொடுக்கும் படியும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி: ஊடகப்பிரிவு –

