
மட்டக்களப்பு மாவட்டதின் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட எல்லைக்கிராமமான மயிலந்தனையில் 1992 .08.09 அன்று 39 தமிழர்கள் மிருகத்தனமாகவும் மிகக்கொடூரமாகவும் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்றாகும். குறித்த நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் பி.ப 2.30. மணியளவில் மயிலந்தனையில் நினைவுகூரப்பட்டது.

மட்டுநகர்ப்பகுதியிலிருந்து 50km தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது.









