
உலகில், எதிர்காலத்தில், அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையில், தவறான புரிதல் ஏற்பட்டால், அணு ஆயுதப் போர் ஏற்படலாம்.
சில நாடுகளின் அழுத்தங்கள், அணுவாயுதப் போருக்கு வழிவகுக்கலாம்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரே, இதற்கு சிறந்த உதாரணம்.
என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தியா, இஸ்ரேல், வட கொரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில், இதுவரை கையெழுத்திடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.