வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
காலை 9 மணி முதல் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி, காலை 10.00 மணிக்கு அந்தண சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க, தவில் நாதஸ்வரம் இசைக்க, பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் இடம்பெற்றது.
தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவம் இடம்பெறவுள்ளது.
ஆலயத்தின் சிறப்பு உற்சவங்களான மஞ்சத்திருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி அருணகிரிநாதர் உற்சவமும், 19ஆம் திகதி கார்த்திகை உற்சவமும் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி மாலை சப்பறத்திருவிழாவும், மறுநாள் 25 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும்,
26 ஆம் திகதி காலை தீர்த்தத்திருவிழாவும் இடம்பெற்று அன்றையதினம் மாலை கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ நிகழ்வுகளை தொலைக்காட்சி ஊடாக நேரலையாக பார்க்க முடியும். யூ-ரியுப் பக்கம் மற்றும் முகநூல் பக்கத்தின் ஊடாகவும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ நிகழ்வுகளை நேரலையாகப் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.