அப்போதைய,யாழ். இந்துக்கல்லூரியில் மாணவ முதல்வர்களும் இடைநிலை பிரிவு மாணவர்களுக்கும் அதிகம் இணக்கம் இல்லா இழுபறியே காணப்பட்ட போதும், ஒருதனுக்காக எல்லாரும் ஒருமித்து நிற்பார்களாயின் அவன் பெயர் தான்.. சகாதேவன் நிலக்சன்.
என் பாடசாலை நாட்களின் தொடக்கத்தில் இவனது துவிச்சக்கர வண்டியும் இவன் கால்களும் என்னை சுமந்து நகர்த்திய நாட்களை என்றும் மறவா என் மனம்.
பாடசாலை பருவத்திலே இவனது தமிழ் பேச்சினையும், இவன் பின்னால் இருந்த மாணவ சக்தியையும் பார்த்து பிரமை பிடித்த பிரபலங்களும் உண்டு.
போராட்டத்தில் தமிழ் மாணவர்களின் பங்களிப்பைத் துணிச்சலாக வழிநடத்திய அண்ணனே!
பாடசாலை காலங்களில்..
பம்மி பதுங்கிய புத்தக பூச்சிகள் பல, இன்று தேசியம் இன ஒற்றுமை விடுதலை பேசி தேர்தலிலும் அரசியலில் இருப்பது நிலக்சன் போன்ற ஆளுமைகளை கண்டவர்களுக்கு என்றும் நகைப்புக்குரியவர்களே!
இன்று (01.08.2022) ஆண்டுகள் 15 ஆகியும் படருதண்ணா உன் நினைவுகள் பசுமையாக…!
என்றோ ஒரு நாள் சந்திப்போம். – அன்று
துரோகங்களையும் துரோகிகளையும் வஞ்சிப்போம்.
அன்பிலா அகிலத்தில் பண்பற்றவரால் பறிக்கப்பட்ட உன் உயிரை பிரிந்தாலும் உணர்வாலே உறவாடுகிறோம்.
நன்றி: மதுரன்.