யாழ். கடற் பகுதியில் திடீர் மாற்றம்: இறந்த நிலையில் ஒதுங்கும் மீன்கள்!

0
148

யாழ். தொண்டைமானாறு கடற்பரப்பில் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலையிலேயே மக்கள் அதனை அவதானித்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு கடற் பகுதியில் திடீரென்று இறந்த நிலையில் பல மீன்கள் மிதந்து கரையொதுங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தற்போது நீர் வற்றிய நிலையில் காணப்படும் அதேவேளை, நேற்றைய தினம் அதிகளவான மழை பெய்துள்ளது.

⚫கரையொதுங்கிய மீன்கள்⚫

மீன்கள் எவ்வாறு இறந்தன என்பது தொடர்பில் இது வரை தெரியவரவில்லை.

இந்நிலையில், இறந்த சிலையில் கரையொதுங்கிய மீன்களை கருவாட்டுக்காக சில மீனவர்கள் எடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்கள் ஏன் இறந்தன? என்பது தொடர்பில் பரிசோதிப்பதற்கு மாவட்ட செயலகத்தின் நீரியல் வள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு செல்வதாகத் தெரிவித்த நிலையில் இதுவரையும் அவர்கள் அங்கு செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here