யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய திரு விழாவுக்கு அழகாகத் தயாராகி வருகின்றது நல்லூர் கந்தன் ஆலய சூழல்.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்குரிய ஏற்பாடுகள் யாழ்மாநகர சபை மற்றும் நல்லூர் ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்படுகின்றன.
வழக்கம் போலவே நாற்புறமும் உள்ள வீதிகளிலும் அலங்கார நுழைவாயில்கள் மற்றும் பந்தல்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.