எமது முன்னோரை நினைவேந்தி வழிபடும் ஆடி அமாவாசைத்தினம் தமிழர் தாயகப் பகுதி உள்ளிட்ட தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதைக் காணமுடிந்தது. உயிரிழந்த தந்தையர் உள்ளிட்ட முன்னோர்களுக்கு சுடர்ஏற்றி தானங்களை வழங்கி விரதம் இருப்பதே இந்நாளின் சிறப்பாகும்.