யாழில் ஒரு வாரத்தில் மற்றொரு இளைஞன் போதை ஊசிக்குப் பலி!

0
73

ஊசி மூலம் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்திவந்த இளைஞன் இதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ் திருநெல்வேலி – பாரதிபுரத்தை சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் அண்மையில் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு சிகிச்சையளித்து மருத்துவர்களினால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

எனினும் கடந்த திங்கள் கிழமை மீளவும் ஊசிமூலம் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

கடந்தவாரம் யாழ்.கொழும்புத்துறையில் 22 வயது இளைஞர் போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றி உயிரிழந்தமை தெரிந்ததே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here