முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை பகுதிகளில் கடலுக்கு குளிக்கச்சென்ற இருவர் உயிரிழப்பு!

0
174

seaமுல்லைத்தீவு மற்றும் திருகோணமலை பகுதிகளில் கடலுக்கு குளிக்கச்சென்ற சிறுவனொருவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமற்போயுள்ளார்.

முல்லைத்தீவு தூண்டாய்க் கடலில் மூழ்கி இளைஞனொருவன் உயிரிழந்துள்ளான்.

கடலில் மூழ்கிய மற்றுமொரு இளைஞனைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தூண்டாய் கடலுக்கு குளிக்கச்சென்ற இரண்டு இளைஞர்களே இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடலில் மூழ்கி உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உடுப்புக்குளம் மற்றும் முள்ளியவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதான இளைஞர்களே நீரில் மூழ்கியதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, திருகோணமலை இறக்ககண்டி காந்தி நகர் கடலில் குளிக்கச் சென்ற சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

கண்டியைச் சேர்ந்த 15 வயதான சிறுவனொருவனே இன்று முற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலைக்கு சுற்றுலா சென்றிருந்த போதே குறித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சிறுவனின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here