
1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர்கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பிரான்சு பஸ்ரில் பகுதியில் இன்று (23.07.2022) சனிக்கிழமை பி.ப. 15.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் நினைவுச் சுடரினை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.
நினைவுரைகளும் இடம்பெற்றன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)









