மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!

0
286

thileeban[1]அன்று இலங்கை , இந்திய ஒப்பந்தத்தின் போலித்தன்மையை வெளிப்படுத்தி இந்திய அரசின் முகத்திரையைக் கிழித்தெறிந்து எமது மக்கள் மனங்களிலிருந்து மாயையை விலக்கி அவர்களை விழிப்படையச் செய்தது திலீபனண்ணாவின் உண்ணாவிரதப் போராட்டம். அவரின் அந்த அகிம்சைவழி உயிர்க்கொடை மூலம் அவர் சொல்லிச் சென்ற விடயமானது, தமிழ்மக்கள் அனைவரும் ஒருமனப்பட்டு விடுதலை நோக்கி நடந்தால் எமது தாயகவிடிவு சாத்தியமாகும் என்பதுதான்.

காலங்காலமாக இலங்கை அரசு தமிழர்கள் மீது மேற்கொண்டு வரும் இனவழிப்பு நடவடிக்கையானது முள்ளிவாய்க்காளில் அதி உச்சமாகி பேரவலத்தைத் தோற்றுவித்தது. மிகப்பெரும் இனவழிப்பைத் இழைத்துவிட்டு சர்வதேசத்திற்குப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும் இலங்கைப் பேரினவாத அரசின் கோரமுகத்தை வெளிக்கொணர ஐக்கிய நாடுகள் சபையானது சர்வதேச விசாரணைப் பொறிமுறையைக் கைக்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி உலகெங்கும் பறந்து வாழும் தமிழர்க்களாகிய நாம் ஒன்றுபட்டு எமது எண்ணத்தை வெளிப்படுத்தவேண்டிய நேரம் இதுவாகும்.

பல்வேறு குழுக்களாகப் பிளவுபட்டு அல்லது கட்சிபேதத்துடன் எமது நிலைப்பாட்டில் வெவ்வேறு கருத்துக்களைச் சொல்லிக்கொண்டு அரசியல் இலாபம் தேடிக்கொள்வதற்கு இது பொழுதல்லவே. எமது நியாயப்பாட்டினை அழுத்தந்திருத்தமாகவும் உறுதியாகவும் சர்வதேசத்திற்கு எடுத்துரைத்து எமக்கான நீதியைப் பெற்றுகொண்டே எமது விடுதலை நோக்கி முன்னேற ஒரே இலக்கோடு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகிறது. இவ்வாறான ஒருமைப்பாட்டினையே திலீபனண்ணா தன் எண்ணக்கருவாக வெளிப்படுத்தினார். நீதிக்கான இப்போராட்டமானது மக்கள் புரட்சியாக வெடிக்குமேயானால் நிச்சயம் எம்மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான தண்டனை இலங்கை அரசுக்குக்கிடைப்பதோடு நீதியின் கண்களும் திறக்கும்.

.

கலைமகள்

20.09.2015

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here