சிறிலங்காவின் கறுப்பு யூலை!
தமிழ் மக்களின் இரத்தத்தால்
இருண்டது- சிறீலங்கா
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து மூன்றில்.
முப்பத்தொன்பது ஆண்டுகளில் மீண்டும் சிறீலங்காவை இருள் சூழ்ந்து கொண்டது, தம்மைத் தாமே அழித்துக் கொள்வதும், நாட்டை அழித்துக் கொள்வதுமாகத் தொடர்கிறது தமிழினத்தை அழித்ததன் பிரதிபலிப்பு.
இதுதான் சிங்கள இனவாத அரசின் அரசியலும் நல்லாட்சி என்ற சர்வாதிகாரத்தின் கடும்போக்கும்.
“அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்”
முப்பத்தொன்பது ஆண்டுகளின் முன்,இதே காலப் பகுதியில் தமிழர்களின் ஓலம், இன்று சிங்கள மக்களின் ஓலம்.
” முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”
எமது இனம் சிந்தித்து
விழிப்புணர்வுடன் செயற்படும் நேரம் இது.
தமிழீழம் மலர்ந்து இருந்தால், அயல் நாடான சிறீலங்காவுக்கு – எமது தலைவரின் வழிகாட்டலில் கைகொடுத்திருப்பார்கள் எமது மக்கள்.
-இளவாலையூர் கவி.