காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் படையினர் மூர்க்கத்தனமான தாக்குதல்!

0
74
கொழும்பு காலிமுகத்திடலில் இன்று அதிகாலை 1மணி தொடக்கம் நூற்றுக்கணக்கான ஆயுதம் தரித்த இராணுவத்தினரும் பொலிசாரும் களமிறக்கப்பட்டு போராட்டக்காரர்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் போது, போராட்டக்காரர்களின் நூலகம் உட்பட்ட கூடாரங்கள் படைத்தரப்பினரால் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, பிபிசியின் ஊடகவியலாளர் ஒருவர் உட்பட்ட ஊடகவியலாளர்கள் மீதும் படைத்தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றும் முயற்சி தீவிரமாக நடைபெறுவதாக தெரியவருகிறது.

பலநூற்றுக்கணக்கில் படைத்தரப்பினர் குவிக்கப்பட்டு போராட்டக்களம் சுற்றிவளைக்கப்பட்டு அங்கு வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பதற்ற நிலை தொடர்ந்தும் நீடிப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவங்களில் 50 போராடடக்காரர்கள் காயமடைந்துள்ளனர்.

நேற்று புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் மேற்கொண்டதுடன், ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை உட்பட்ட அலுவலகங்களை கைப்பற்றியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here