ரணிலின் ஆட்டம் “கோட்டா கோ கம” வில் இருந்து ஆரம்பம்!

0
156

“கோட்டா கோ கம” போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது போராட்டக்களத்திலிருந்த சட்டத்தரணி ஒருவர் உட்பட 10 போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், காலிமுகத்திடல் பகுதிக்கு சிவில் உடையணிந்த இராணுவத்தினர் நூற்றுக்கணக்கானோர் மற்றும் விமானப்படையை சேர்ந்தவர்கள் வருகை தந்துள்ளதாக  போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினருடன் மோத வேண்டாம், இல்லையெனில் அவசரச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.

இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் போது பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறாத வண்ணம் கோட்டா கோ கம பகுதியை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கோட்டா கோ கம பகுதியில் கூடாரங்கள் மற்றும் தடயங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here