பிரான்சில் நடைபெற்ற பல்லினநாட்டு உதைபந்தாட்ட அணியுடன் தமிழீழ அணி பிரான்சு அபார வெற்றி!

0
254


கடந்த 14 ஆம் திகதியிலும், 17ஆம் திகதியும் பிரான்சு நாட்டில் பரிசின் புறநகர் பகுதியில் இருக்கும் பிரபல்யமான உதைபந்தாட்ட அணிகளான கொங்கோ, செனகல், மொறொக்கோ, மொறித்தியன், மாலி, போர்த்துக்கல், கோ து வோறே ( ஆபிரிக்கா) அல்ஜீரியா மற்றும் பிரான்சு போன்ற 9 அணிகளுடன் சிநேகபூர்வமாக Coup des nation de Neuilly இல் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஆபார வெற்றியை தமிழீழ அணி பிரான்சு பெற்றுக்கொண்டது.


கால் இறுதிப்போட்டியில் செனகலுடன் மேதிய தமிழீழ அணி 4 – 0 கோல்களைப் போட்டும், அரை இறுதி தெரிவாகி, தம்முடன் மோதிய மொறோக்கோ அணிக்கு 6 கோல்களை கொடுத்து 1 கோல்களையும் பெற்றதோடு, இறுதிப்போட்டிக்கு தெரிவான தமிழீழ அணி தம்முடன் போட்டிக்கு வந்த போத்துகல் அணிக்கு 8 கோல்களை அடித்து போர்த்துக்கலிடமிருந்து 2 கோல்களையும் பெற்றுக்கொண்டனர். இறுதியில் அபாரவெற்றியை பெற்ற தமிழீழ அணியினை சிநேகபூர்வமாக அனைத்து நாட்டுவீரர்களும் கைகளை கொடுத்து பாராட்டியிருந்தனர். அறிவிப்பாளர் தமிழ் தமிழ் என்று அறிவிக்கும் போது ஒவ்வொரு வெற்றிபந்தை அடிக்கும்போது அனைத்து மக்களும் தமிழீழ அணிக்கு காட்டிய உற்சாகம், கரகோசம் எமது வீரர்களுக்கு பெரும் பலத்தைக் கொடுத்திருந்தது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறையும் ,ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேன ஆதரவோடும் பங்களிப்புடனும் தமிழீழ தேசத்திற்கும், எமது வீரர்களுக்கும் விளையாட்டுத்துறையின் ஊடாக பெயரையும், புகழையும் மீண்டும் பெற்றுத்தந்திருக்கின்றனர்.


நியூலிப்பிளசென்ஸ் என்னும் இடத்தில் இரண்டு வாரங்களும் கடும் வெயிலுக்கு மத்தியிலும் நட்புரீதியாக ஏற்படுத்தப்பட்ட போட்டி என்ற நிலையில் உதைபந்தாட்டத்திற்கு உரியதற்ற நிலத்தில் விளையாடி இப்பெருவெற்றியை தந்த எம்மவர்கள் உதைபந்தாட்டத் தரையில் விளையாடியிருந்தார்களானால் இன்னும் பெரும் வெற்றியை தேடித்தந்திருப்பார்கள் என்ற கருத்தே ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்பட்டது. இப்போட்டிகளில் தமிழர் விளையாட்டுத்துறையுடன் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட நிர்வாகத்தால் தெரிவு செய்த வீரர்கள் பங்கு கொண்டிருந்தனர். தமிழீழ தேசரீதியாக தமிழ் இனத்திற்கும், மக்களுக்கும், பெருமைசேர்த்த தமிழீழ அணி பிரான்சு வீரர்களையும், அவர்களின் கழகங்களையும் தமிழீழ மக்கள் சார்பாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பாராட்டியிருந்தனர்;.
நன்றி ஊடகப்பரிவு –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here