https://youtu.be/q8gddfjl4m0
பன்னாட்டு விசாரணை வலியுறுத்த ஜெனீவாவுக்கு அணி திரளுங்கள் என கோபி சிவந்தன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி நாங்கள் இன்று போராடிக்கொண்டிருக்கிறோம்.
எதிர்வரும் 21ம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு நடைபெறும் பேரணியில் ஐ.நாவை நோக்கியும் சர்வதேசத்தை நோக்கியும் நாங்கள் எழுப்புகின்ற குரல் பன்னாட்டு நீதிமன்றத்தில் இந்தப் போர்க்குற்றவாளிகளையும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு நீதிகோரியும் நாங்கள் போராட்டத்தை தொடர்ச்சியாகச் செய்கின்றோம்.
இனப்படுகொலை செய்தவர்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பன்னாட்டு நீதிமன்றத்தில் தண்டிப்பதற்கு ஐ.நாவை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற இருக்கின்றது அதற்கு அனைவரையும் வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(நன்றி:பதிவு)