பிரான்சைத் தாக்கும் அதியுச்ச வெப்பம்: பல பகுதிகளும் பாதிப்பு!

0
222

பிரான்சில் தற்போதைய வெப்பம் அடுத்த பத்துத் தினங்களாவது நீடிக்கும் என்றும் எதிர்வரும் வாரத்தில் திங்கள்,செவ்வாய் நாட்களில் பாரிஸ் உட்பட நாடு முழுவதும் அதி உச்ச வெப்பநிலையைச் சந்திக்கலாம் என்றும் காலநிலை மையம் எதிர்வுகூறியுள்ளது. பாரிஸில் திங்கள், செவ்வாய் நாட்களில் நாற்பது பாகை வெப்பம் பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு ஐரோப்பாவை வீச்சு அலையால் பாதித்திருக்கின்ற வெப்ப அனல் போர்த்துக்கல் முதல் துருக்கி வரை பிரித்தானியா முதல் பிரான்ஸ் வரை தாவரக் காடுகளை அழித்து வருவதுடன் பொதுமக்களின் நாளாந்த வாழ்வையும் பாதித்திருக்கிறது.

பல சுற்றுலா மையங்களில் உல்லாசப் பயணிகள் வெப்பம் தாங்க முடியாமல் வெளியேற்றப்பட்டுள்ளனர். போர்த்துக்கல் நாட்டின் வட பகுதி, ஸ்பெயினின் மேற்குப் பகுதிகள் தீ அனர்த்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here