
பெரும் ரணகளத்திற்கு மத்தியிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ இன்று பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

இந்நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டுமென்ற அவரது நெடுநாள் கனவு இன்று நிறைவேறியது.
இடைக்கால ஜனாதிபதி ஒருவரை நியமிக்கும் வரை இந்த பதவி தொடருமென சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அது 7 நாட்களில் இடம்பெறுமா அல்லது 7 மாதங்கள் செல்லுமா என்பதை எதிரணிகளின் சாமர்த்தியத்தை பொறுத்தே தங்கியுள்ளது.
இதேவேளை இனிமேல் “அதிமேதகு” என்னும் வார்த்தை பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதிக்கென உள்ள தனிக்கொடி தடை செய்யப்படுமெனவும் அதிரடியாக சில அறிவிப்புக்கள் செய்து அசத்தலாக ஆரம்பித்துள்ளார் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ.
எது எப்படியோ மீண்டும் ஒரு ஜெற் விமானம் தயார் செய்யாமல், நாட்டு மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
15.07.2022