கடந்த ஞாயிறு (10.07.2022) அன்று காலை 11.00 மணியை நெருங்கிய வேளை கிளிநொச்சி பொது சந்தைக்கு சென்று திரும்பி கனகபுரம் பக்கமாக உள்ள வாயிலை அடைகிறேன். கனகபுரப்பக்கமாக பாடசாலை சிறுவர்கள் பதினைந்துக்கு மேற்பட்டோர் கூட்டமாக ஓடி வருகின்றனர். அவர்களுக்கு முன்னால் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் நடந்து வந்துகொண்டிருக்கிறார். கூட்டமாக ஓடி வந்த அந்த சிறுவர்கள் அனைவரும் அந்த இளைஞனை சரமாரியாக தாக்குகின்றனர். சந்தை வாசலில் ஒரு இளைஞர் இவ்வாறு கற்களாலும் கையில் கிடைத்த தடி பொல்லுகளால் அந்த இளைஞர் தாக்கப்படுகிறார். யாரரும் தடுக்கவில்லை எல்லோரும் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். இறுதியில் அடி தாங்க முடியாமல் அந்த இளைஞர் சந்தைக்குள் ஓட சிறுவர்கள் விட்டு கலைந்து செல்கின்றனர்.
இதன் பின்னர் தாக்குதலுக்கு இலக்கான இளைஞரை சிலர் சென்று விசாரிக்கின்றனர். ஏன் உங்களை அடிச்சவங்கள். உங்களுக்கும் அவகங்களுக்கும் என்ன பிரச்சினை? நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ? இவ்வாறு கேள்விகளை கேட்ட போது அந்த இளைஞன் சொன்ன காரணம் நின்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த இளைஞன் சொன்னான் தான் யாழ்ப்பாணம் உரும்பிராயில் இருந்த ஒரு வேளை விடயமாக தனது தங்கையையும் அழைத்துக்கொண்டு கிளிநொச்சிக்கு வந்ததாகவும் தானும் தங்கையும் கனகபும் வீதி ரயில் கடவையை அண்மித்த போது தன்னைத்தாக்கிய சிறுவர்கள் ரயில் கடவைக்கு அருகில் கூட்டமாக நின்று கொண்டு தன்னுடைய தங்கயை பார்த்து தங்களுடன் வருமாறு கேவலமான வார்த்தைகளால் கூப்பிட்டதாகவும் அதனால் தான் அந்த சிறுவர்களை ஏசியதாகவும் அதனால் தன்னை இவ்வாறு தாக்கினார்கள் என்றும் சொல்லி முடித்தார்.
உண்மையில் தாக்குதல் நடத்திய சிறுவர்களில் இம்முறை சாதாரணதரம் பரீட்சை எழுதிய மாணவர்களும் இந்த ஆண்டு சாதாரணதரம் எழுதப்போகும் மாணவர்களும் தரம் பத்தில் படிக்கும் மாணவர்களும் அடக்கம். இவர்கள் அனைவரும் கிளிநொச்சி நகரை அண்டிய கிராமங்களில் இருந்து தனியார் கல்வி நிலையத்திற்கு வருவதாக கூறிவிட்டு நகிரில் வந்து கஞ்சா பாவித்து பின்னர் தனியார் கல்வி நிலையங்களுக்கு சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் யார் தட்டிக்கேட்டாலும் அவர்களை இவ்வாறு கூட்டமாக தாக்குவதாகவும் இவ்வாறான சம்பவங்களை நாள்தோறும் பார்த்துக்கொண்டிருக்கும் பழ வியாபாரிகள் குறிப்பிட்டனர்.
இப்போது என்னுடைய கேள்வி என்னவெனில் கிளிநொச்சியில் இயங்கும் சமூகமட்ட அமைப்புக்களும் காவல் துறையும் என்ன செய்கின்றன.
பொது வெளியில் ஒரு தந்தை தன் மகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. ஒரு அண்ணன் தன் தங்கையை அழைத்துச்செல்ல முடியவில்லை. இப்படி இருக்குமாக இருந்தால் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகும்? இது போன்ற சம்பவங்களால் பல பெற்றோர் தமது பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு கூட அனுப்பாமல் விட்டிருக்கிறார்கள்.
மாவட்ட அரசாங்க அதிபரே மாவட்ட காவல்துறை பொறுப்பதிகாரியே மாவட்ட சமூகமட்ட அமைப்புக்களின் தலைவர்களே அரசியல்வாதிகளே சமூக அக்கறை கொண்ட இளைஞர்களே இது விடயத்தில் உடனடியாக கவணம் எடுங்கள். கிளிநொச்சியை அழிவில் இருந்து மீட்பதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.
பிரதி – Siva karan