பிரான்ஸ் சுதந்திர நாளில் சாகச விமானத்தில் பறந்தார் மக்ரோன்!

0
239

அதிபர் மக்ரோன் Patrouille அல்பா ஜெற் விமானம் ஒன்றில் சாகச வீரர்களுடன் இணைந்து பறந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. நாட்டின் அதிபர் ஒருவர் இந்த ரக சாகச விமானத்தில் ஏறிப் பறப்பது இதுவே முதல்
முறை என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸின் விமான விண்வெளிப் படைப் பிரிவின் ஒரு பிரிவாக விளங்குவது” Patrouille acrobatique de France” என்னும் விமான சாகசம் மற்றும்
அணிவகுப்புகளுக்கான படை. 1953
இல் நிறுவப்பட்டது. நாட்டின் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடிகளின் வர்ண வாண வேடிக்கை காட்டியவாறு அதன் விமானங்கள் பாரிஸ் நகரின் மேல் பறப்பது வழக்கம். அதற்கான பரீட்சார்த்தப் பறப்புகளின் போதே நாட்டின் அதிபர் மக்ரோன் Patrouille
விமானம் ஒன்றில் பறந்துள்ளார்.
இத்தகவலை விமானப்படை வெளியிட்
டிருக்கிறது.

நாட்டின் சுதந்திர தின அணிவகுப்பு
இன்று பாரிஸில் அழகிய Avenue des Champs-Elysées தெரிவுல் நடக்கிறது.
அதிபர் மக்ரோன் வழக்கமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளவுள்ளார். கால் நடை அணிவகுப்பாக 5ஆயிரம் வீரர்கள் உட்பட
6ஆயிரத்து 500 பேர் இன்றைய அணிவகுப்புகளில் இணைகின்றனர்.
64 விமானங்கள், 25 ஹெலிக்கொப்ரர்கள்
200 குதிரைகள், 181 வாகனங்கள் என்பன
வும் அணிவகுப்பில் பங்குகொள்கின்றன.

உக்ரைன் – ரஷ்யா போரின் பிரதிபலிப்புகள் இன்றைய சுதந்திரதின அணிவகுப்பில் காணப்படுகின்றன. கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ சார்பில் பிரெஞ்சுப் படைகள் நிலைகொண்டுள்ள ஓன்பது நாடுகளின் பிரதிநிதிகள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

எஸ்தோனியா, லாத்வியா, லிதுவேனியா, போலந்து, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் பல்கேரியா நாடுகளின் தேசியக் கொடிகளுடன் படை வீரர்கள் அணிவகுக்கின்றனர்.

      -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                     14,ஜூலை 2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here