வரலாற்றுச் சிறப்புமிகு நயினை நாகபூசணி அம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று 12.07.2022 செவ்வாய்க்கிழமை பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ பக்தி பூர்வமாக நடைபெற்றது.
நேற்றையதினம் சப்பரத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இன்றைய போக்குவரத்து மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அடியார்கள் அலையெனத் திரண்டு வந்துள்ளமை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான அடியார்கள் தூக்குக்காவடி போன்ற நேர்த்திகளையும் நிறைவேற்றியிருந்தமையைக் காணமுடிந்தது.
இன்றைய தினம் தேர்த்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தேர்த்திருவிழாவில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்காகவும் புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் தாயக உறவுகளுக்காகவும் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் விசேட நேரலைக் காட்சிகள் சமூக இணையம் மற்றும் தொலைக்காட்சிகளின் வாயிலாகக் காணமுடிந்தது.
(எரிமையின் செய்திப் பிரிவு)