பிரதமர் ரணிலின் இல்லம் தீக்கிரை: மூவர் கைது!

0
178

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மூவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும், கடவத மற்றும் காலி பிரதேசத்தைச் சேர்ந்த இருவருமே அடங்குவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


நேற்றிரவு பிரதமரின் வீட்டிற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று பிரவேசித்ததை அடுத்து, தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீடு முற்றாக எரிந்துள்ள நிலையில் வீட்டில் இருந்த கலைப் பொருட்கள், மதிப்பு மிக்க புத்தகங்கள் என அனைத்தும் தீயில் எரிந்துள்ளதாக எரிமலையின் செய்தியாளர் கொழும்பில் இருந்து தெரிவித்தார்.

(படங்கள்: எரிமலைக்காகத் தீப ஒளி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here