யாழில் இடம்பெற்ற நவாலி சென் பீற்றர் தேவாலய படுகொலை நினைவேந்தல்!

0
155

யாழ்.நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி சிறிலங்கா விமான படையினர் வீசிய குண்டு வீச்சில் இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 147 இற்க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் இன்று 09.07.2022 சனிக்கிழமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் மலரஞ்லி செலுத்தி சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.

நினைவுரைகளும் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here