ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது பல போராட்டக்காரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதுவரை போராட்டத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இராணுவத்தினர் வீசிய கண்ணீர் புகைக்குண்டில் காவல்துறையினர் சிக்கித் தப்பிச் சென்றுள்ளனர்.