அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கோட்டை நோக்கி பேரணியாகச் சென்றுள்ளனர்.
மேலும் மாணவர்கள் அங்கு இன்று இரவு தங்கியிருந்து நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள பாரிய போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை பத்தாயிரம் படையினர் களத்தில்…
பொலிஸார் 6296 பேர் 1830 பேர் வீதம் இரண்டு ஷிஃப்ட் கடமையில் ராணுவம் .
பொலிஸாரில் இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், , 24 எஸ்.எஸ். பி.க்கள், 86 ஏ.எஸ்.பி.க்கள் என 6296 பொலிஸார், இதில் இருநூறு பெண் பொலிஸார்.
இவர்களுக்கு மேலதிகமாக 1000 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பத்து விமானப் படை ஹெலிகொப்டர்கள், கடற்படையின் 20 க்கு மேற்பட்ட டிங்கி வள்ளங்கள் என நாளை கொழும்பில் பாரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை நடைபெறவுள்ளது.