பிரிட்டனில் இரண்டு முக்கிய அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் ரிஷி சுனாக், சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் இருவரும் பதவி விலகியுள்ளனர்.
சர்ச்சையில் சிக்கிய ஓர் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரை அரசாங்கம் கையாண்டவிதம் குறித்து பிரிட்டனில் குறைகூறல் வலுத்துவரும் நிலையில் அமைச்சர்கள் பதவி விலகினர்.
தொடர்ந்து பல ஊழல்கள் குறுக்கிட்டாலும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பதவி விலகுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவரது கட்சியைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் பதவி விலக வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.