காரை.எரிபொருள் நிலைய விநியோகம் பாதிப்பு: மக்கள் போராட்டம்!

0
185

காரைநகர் – வலந்தலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் பொறுமை இழந்து இன்று (07) இரண்டாவது நாளாகவும் வீதி மறியலில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்றும் எரிபொருள் விநியோகிப்பதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முற்பகல் பழுதடைந்த எரிபொருள் விநியோகப் பம்பியைத் பழுதுபார்க்க அநுராதபுரத்தில் இருந்து வரவேண்டிய பணியாளர்கள் இதுவரை அங்கிருந்து புறப்படவில்லை, அவர்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன, வந்து பம்பி திருத்தப்பட்டவுடன் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் எனவும் மேற்படி தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று முன்தினம் தொடக்கம் நீண்ட வரிசையில் காத்திருந்த காரைநகரைச் சேராத வெளிப்பிரதேச மக்கள் தமக்கும் சமமாக எரிபொருள் வழங்கவேண்டும் என நேற்று (06) போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கான பதில் வழங்கப்பட்டதால் போராட்டத்தை நேற்று பிற்பகல் முடித்துகொண்டனர்.

எனினும் இன்று வியாழக்கிழமை பம்பி திருத்தப்பட்டு எரிபொருள் விநியோகிக்கப்படும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.

24 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் பம்பியைத் திருத்தி எரிபொருள் விநியோகிக்க அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய மக்கள் இன்று மதியம் மீண்டும் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தால் காரைநகருக்கும் வெளி இடங்களுக்குமான போக்குவரத்துக்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here