உயிர் ஆயுதங்களான எங்கள் கரும்புலிகள் பற்றி உலகம் வியப்படைகின்றது. தமிழர்கள் பூரிப்படைகின்றனர், எதிரிகள் அச்சமடைகின்றார்கள். ஆனால் கரும்புலிகள் சாதாரண மனிதர்கள் பண்பும், பாசமும், மண் பற்றும், மனிதநேயமும் கொண்டவர்கள் என்பதை பழகியவர்களுக்குத் தான் தெரியும். இவர்கள் தம் உயிரைவிட விடுதலையை நேசித்தவர்கள். விடுதலையின் பெறுமதியை உணர்ந்தவர்கள். மானிடவிடுதலை எமக்கு மட்டும் ஏன் வழங்கப்படவில்லை என்ற வினாவைக் கொண்டவர்கள் அந்த வினாவுக்கு அவர்கள் தேடும் சரியான பதில் கிடைக்காமையினால் எமது நாட்டின் விடுதலைக்காக எதிரியை பலவீனப்படுத்தும் எதிரியை அழிப்பதும் தான் ஒன்றே வழியென்பதற்காக தங்கள் உயிர்களை கொடுக்கத் துணிந்த தெய்வீகப் பிறவிகள் இவர்கள்.
இந்த காவல் தெய்வங்களை குடும்பத்துடன், சந்ததிசந்ததிகளாக வழிபடவேண்டியது தமிழர்களின் வரலாற்றுக்கடமையாகும்.
“ உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் அட உலகிற்கெங்கே? அது புரியும் கருவேங்கைகள் விடைபெறும் வேளையில் நாம் பட்ட வேதனை யாருக்கடா தெரியும்’’
தடைநீக்கிகள் 35 ஆவது நினைவேந்தல்
05.07.2022 செவ்வாய்கிழமை 15.00 மணிக்கு
இடம் : 36 Avenue de la Division Leclerc 93000 BOBIGNY ( Bus 134, 234 ( Arrét : Republique -Division Leclerc)
உங்கள் இதயத்தால் வணக்கம் செய்ய வாருங்கள்.
மாவீரர் பணிமனை – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு.