யாழில் எரிபொருள் நிலையத்தில் தவறி விழுந்த முகாமையாளர் உயிரிழப்பு!

0
125

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தவறி விழுந்த முகாமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பம் இயக்கச்சி எரிபொருள் நிரப்புநிலையத்தில் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் இன்று குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கரவெட்டி, கட்டைவேலியைச் சேர்ந்த அனுரா அனுஷாந் (வயது 34 ) என்பவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்தவேளை படிக்கட்டில் ஏறும் போது தவறி விழுந்துள்ளார் எனவும் –

தலையில் பலத்த அடி விழுந்து சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளார் எனவும் – தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here