பிரான்சில் இளங்கலை தமிழியல் B.A பட்டப்படிப்பின் புதிய பிரிவு நாளை ஆரம்பம்!

0
348


பிரான்சில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் நடாத்தப்படும் இளங்கலை தமிழியல் B.A பட்டப்படிப்பு நாளை 03.07.2022 ஞாயிற்றுக்கிழமை
காலை 11 மணி தொடக்கம் 12 மணிவரை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் புதிய பிரிவினருக்கு ஆரம்பமாகின்றது.
புதிதாகப் பதியவுள்ள மாணவர்களும் இதில் இணைந்து கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பதிவுகளை மேற்கொள்ள கீழ்க்காணும் ஆவணங்களை எடுத்துவருமாறும் கேட்கப்பட்டுள்ளது .

  1. BAC சான்றிதழ் இருப்பின் தரமுடியும்.
  2. வதிவிட அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு.
  3. அண்மையில் எடுக்கப்பட்ட மூன்று (3) நிழல்படங்கள்.

குறித்த மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு கடந்த 19.06.2022 அன்று தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here