ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் கொட்டும் மழைக்கு மத்தியில் பேரெழுச்சியோடு இடம்பெற்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அதன் உபகட்டமைதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலை அடையும் வரை “உரிமைக்காக எழுக தமிழா” ஒன்று கூடல் நேற்று 27.06.2022 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பெல்சியம் நாட்டில் உள்ளப்புக்களின் ஏற்பாட்டில் ஒழுங்கமைந்த இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, பெர்சியம் நாட்டுத் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
தியாகதீபம் லெப்.கேணல் தீலீபன், பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் ஆகியோரின் திருஉருவப்படங்களுக்கு முன்னால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து ‘உரிமைக்காக எழுக தமிழா” தொடர்பான பிரகடன அறிக்கை வாசிக்கப்பட்டது.
சிறப்புரையினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத்தொடர்பகப் பொறுப்பாளர் திரு. மகேஸ்வரன் அவர்கள் ஆற்றியிருந்தார். இளையோர்களின் பிரெஞ்சுமொழி, ஆங்கிலமொழி, டொச்மொழி போன்றவற்றில் உரைகள் இடம்பெற்றிருந்தன. ஜேர்மனியில் இருந்து வருகைதந்த குர்திஸ்டான் நாட்டவரின் உரையும் இடம்பெற்றிருந்த நிலையில், சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பிலான உரையை, ஊடகவியலாளர் கனகரவி அவர்கள் ஆற்றியிருந்தார்.
கொட்டும் மழைக்கு மத்தியில் பிரித்தானியாவில் இருந்து வருகைதந்த நடன மாணவர்களின் எழுச்சி நடனம் அனைவரையும் எழுச்சிகொள்ளவைத்திருந்தது. அத்தோடு, இளையோர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தை நோக்கி ஆங்கில மொழியில் சிறிலங்கா அரசாங்கம் பயங்ரவாத அரசு என்றும், எங்கள் தலைவர் பிரபாகரன் என்றும் எமக்கு தமிழீழமே ஒரே தீர்வு என்றும் தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டும் எனவும் ஓங்கிக் குரல் கொடுத்தமை நிகழ்வை மேலும் எழு;சசியடைய வைத்தது.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்தும் வருகைதந்த மக்கள் பேரெழுச்சி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
நிறைவாகத் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)
(படங்கள்; பெல்சியத்தில் இருந்து எரிமலைக்காக கந்தரதன்)