வடமாகாண இ.போ.ச. ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு; மக்கள் சிரமம்!

0
82

வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களிற்கு பெற்றோல் வழங்கப்படாமையை கண்டித்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் ஊழியர்கள் இன்று (27) திங்கட்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால் வழமையான பேரூந்து சேவைகள் இடம்பெறவில்லை.

மேலும் யாழ். மத்திய பேருந்து நிலையமும் இன்று காலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இ.போ.ச வடபிராந்திய சேவை உத்தியோகத்தர்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டம் கைவிட்டு கடமைக்கு வருமாறும், ஊழியர்களுக்கு பெற்றோல் பெற்றுக் கொடுப்பதற்கு ஆளுநர் மற்றும் மாவட்டச் செயலர் ஆகியோர் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் இ.போ.ச வடபிராந்திய முகாமையாளர் கூறியுள்ளார் என யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here