சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமான நடை பயணம் இன்று (14) யாழில்
நிறைவுபெற்றது.
இன்று (14) காலை கைத்தடியில் ஆரம்பமாகிய நடை பயணத்தின் போது செம்மணி புதைகுழியில்
சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது .
இதன் போது யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் உள்ளிட்ட வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர் .
இதன் பின்னர் ஏ – 9 வீதியூடாக சென்று யாழ். நகரில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் மஹஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதுடன் யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்திலும் மஹஜர் கையளிக்கப்பட்டது .
இதன் பின்னர் சங்கிலியன் தோப்பை சென்றடைந்த நடைபவணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது