வேலி தாண்டிக் குதிக்க முயற்சித்த குடியேறிகளில் 18 பேர் உயிரிழப்பு!

0
277

ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய
ஆயிரக்கணக்கானோர் இடிபாடு!

ஸ்பெயினின் ஆபிரிக்காவுடனான எல்லைப்பகுதியாகிய மெலிலாவில் (Melilla) வெளிநாட்டுக் குடியேறிகள்
குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர். 76 பேர் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள் வருகின்றன.

மொரோக்கோ ஊடாக ஸ்பெயினின்
எல்லைக்குள் நுழைய முயற்சித்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டுக் குடி
யேறிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்போது அங்கு ஏற்பட்ட களேபரங்
களிலேயே அவலச் சாவுகள் நிகழ்ந்துள்ளன. எல்லைக்காவல் படையினருடன் ஏற்பட்ட கைகலப்பு மோதல்களில் சிலர் உயிரிழந்தனர் என்றும் எல்லை வேலி மீது ஏறிக் கடக்க
முயன்ற பலர் வீழ்ந்து பலியாகினர்
எனவும் மொரோக்கோ நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொரோக்கோ எல்லைக் காவல் படையினர் சுமார் 140 பேரும் இந்த அசம்பாவிதத்தில் காயமடைய நேரிட்டது
என்று அந்நாட்டு உள்ளதுறை அமைச்சு
தெரிவித்தது. ஸ்பெயின் காவல் படைவீரர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.

பல நாடுகளில் இருந்தும் வந்து ஆபிரிக்காவின் சஹாரா வட்டகை ஊடாக
வடக்கே நகர்ந்து ஜரோப்பாவினுள்
நுழைய முயற்சிக்கின்ற குடியேறிகள்
காரணமாக மொரோக்கோ – ஸ்பெயின்
இருநாட்டு உறவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்பெயினின் மெலிலா மற்றும் சியூடா(Melilla and Ceuta) என்ற இரண்டு ஆள்நடமாட்டமற்ற சிறிய எல்லை வேலிப் பகுதிகளைத் தாண்டி ஐரோப்பாவுக்குள் நுழையும் குடியேறிகளைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் அண்மையில் உடன்படிக்கை ஒன்றைச் செய்திருந்தன.

ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள்
மட்டுமன்றி சட்டவிரோத பயண முகவர்களால் அழைத்து வரப்படுகின்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும்
இந்த எல்லை ஊடுருவல்களில் சிக்கித்
தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுகின்றனர்.

      -பாரிஸிலிருந்து குமாரதாஸன். 
                                                25-06-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here