
பிரிட்டனில் சுமார் 30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய ரயில் வேலை நிறுத்தம் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
3 நாள் நடைபெறும் நாடளாவிய வேலை நிறுத்தத்தில் 50,000க்கும் அதிகமான ரயில் தொழிற்சங்க உறுப்பினர்கள் பங்குபெறுவர்.
அதிகரிக்கும் பணவீக்கத்துக்கு ஈடுகொடுக்கச் சம்பளத்தைக் கூட்டும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை முன்னேற்றம் ஏதும் காணாததால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
வேலை நிறுத்தம் மிகத் தவறான முடிவு என்று பிரிட்டனின் போக்குவரத்து அமைச்சர் கூறினார்.
வேலை நிறுத்தம் தொடரும் நாட்களில் ரயில் கட்டமைப்பில் பாதி மட்டுமே நாட்டில் செயல்படும்.
தேசியத் தேர்வுகள் உள்ளிட்ட பெரும் நிகழ்வுகள் அதனால் பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனில் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்திருப்பதோடு இதனால் வாழ்க்கைச் செலவும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.