விபத்தில் முதியவர் சாவு : மோதியவர் தப்பியோட்டம்!

0
197

Covered dead body of a person in the morgue with a tag attached to the toe
Covered dead body of a person in the morgue with a tag attached to the toe
வீதியைக் கடந்த வயோதிபரை மோட்டார் சைக்கிளில் சென்றவர் மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். வயோதிபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்துள்ளார்.

சங்கானையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காரைநகரைச் சேர்ந்த ரி.நவரத்தினம் (வயது 76) என்பவரே உயிரிழந்தவராவார்.

வழமைபோன்று சங்கானைச் சந்தைக்குச் சென்றுவரும் அவர் அன்றையதினமும் பஸ்ஸில் சென்று சங்கானைச் சந்தியில் இறங்கி வீதியைக்கடக்க முற்பட்டபோதே அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் அவரை மோதியுள்ளார். மோதியவர் நிற்காது தப்பிச் சென்றுள்ளார்.

அங்கு கூடியவர்கள் அந்த வயோதிபரைச் சங்கானையில் சேர்த்தனர். அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனளிக்காது அவர் உயிரிழந்தார். திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here