மெலன்சோனின் இடதுசாரி அணி
பிரதான எதிர்க்கட்சியாகி சாதனை
சுமார் 75 ஆசனங்களைக் கைப்பற்றி
மரின் லூ பென் கட்சி அதிரடி வெற்றி
நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்
ளன. முன்கூட்டிய மதிப்பீடுகளின் படி
அதிபர் மக்ரோன் தரப்பு 205 முதல் 235
இடங்களை மட்டுமே கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையை எட்ட முடியாத தூரத்
தில் உள்ளது. 577 உறுப்பினர்களைக்
கொண்ட நாடாளுமன்றத்தில் அறுதிப்
பெரும்பான்மையை வெல்வதாயின்
289 ஆசனங்களைக் கைப்பற்றியாக
வேண்டும்.
ஆளும் கட்சிக் கூட்டணி பெரும்பான்மை
பெறத் தவறியுள்ளதால் நாட்டின் அதிபர் நாடாளுமன்ற அதிகாரத்தை இழக்கின்ற
நிலை ஏற்பட்டுள்ளது. தீவிர இடதுசாரி
யாகிய மெலன்சோன் தலைமையில்
உருவாகிய பசுமை +இடதுசாரிகள் கூட்டணி (Nupes) 170-190 ஆசனங்களைக்
கைப்பற்றும் நிலையில் பிரதான எதிர்க்
கட்சியாக உருவெடுத்துள்ளது.
தீவிர வலதுசாரியாகிய மரின் லூ பென் னின் கட்சி, நாட்டின் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக
சுமார் 75 நாடாளுமன்ற ஆசனங்களை
வெல்லும் நிலையில் உள்ளது. அதிரடியான இந்தப் பாய்ச்சல் அக் கட்சியை நாளுமன்றத்தில் மூன்றாவது அணியாக முன்னிறுத்தியுள்ளது. வலது சாரி Les Républicains கட்சியும் அதன்
நேசக் கட்சியும் 50-75 இடங்களை வெல்லும் நிலையில் உள்ளன.
இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்று
வாக்களிப்பும் மிகவும் மந்தமாகவே
நடந்தேறியுள்ளது. இன்று மாலை ஐந்து
மணிவரை பதிவான மொத்த வாக்களிப்பு வீதம் 38.11 ஆகும். கடந்த
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதற்சுற்றில் பதிவாகிய மொத்த வாக்கு
வீதத்தை விட இது சற்றுக் குறைவாகும்.
மேலும் விரிவான செய்திகள் எதிர்பார்கப்படுகின்றன.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
19-06-2022