அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐ.நா அறிக்கை : மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பு!

0
126

zeid-al-hussainஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா அறிக்கை, அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகிய ஐ.நாவின் 30ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும், அதற்கு பொறுப்புக் கூற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கையில் போன்று சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு போர் குறித்தும் இதன்போது மனித உரிமைகள் ஆணையாளர் கவனம் செலுத்தினார்.

47 உறுப்பு நாடுகள் கலந்து கொள்ளும் ஐ.நா அமர்வில், இம்முறை இலங்கைக்கு சார்பாக அமெரிக்கா பிரேரணை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here