பிரான்சில் இளங்கலைத் தமிழியல் பட்ட புகுமுக மாணவர்க்கு உற்சாக வரவேற்பு!

0
532

தமிழ்ச்சோலை இளங்கலைத் தமிழியல் (BA) பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் புகுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இன்று  19.06.2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப 15:00 மணிக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தில் இடம்பெற்றது.
வளர் தமிழ்-12 நிறைவுசெய்த மாணவர்கள், இவ்வாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், மேலும் தமிழ் ஆர்வலர்கள், பள்ளியில் கற்பித்துவரும் ஆசிரியர்கள் இந்தப் பட்டப்படிப்பில் இணைத்துக்கொள்ளப்படும் நோக்கில் இன்று பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.

புகுமுக மாணவர்களை பட்டகர்களும், பட்டப்படிப்பு மாணவர்களும் விரிவுரையாளர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.

விரிவுரையாளர்கள் புகுமுக மாணவர்களுக்கு பட்டப்படிப்புத் தொடர்பாக விளக்கமளித்தனர்.

இன்றைய நிகழ்வில் கணிசமான மாணவர்கள் உற்சாகமாக இணைந்துகொண்டு பதிவுகளை மேற்கொண்டதுடன் தம்மை அறிமுகமும் செய்துவைத்தனர்.

புகுமுக மாணவர்களின் சார்பில் தெரிவிக்கையில், வளர்தமிழ் 12 வகுப்போடு நிறுத்தாமல் மேலும் தமிழைக் கற்கவேண்டும் என்ற ஆர்வத்துடனும் எதிர்கால சந்ததியினருக்குத் தமிழ் சென்று சேர்வதற்காகவுமே தாம் இக்கற்கையைத் தொடர விரும்புவதாக உறுதியோடு தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் தெரிவிக்கையில்,

தமிழ்ச்சோலைத் தமிழியல் இளங்கலைமாணிப் பட்டப்படிப்பில் இணைந்துகொண்ட தங்களைத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் இனிதே வரவேற்கின்றது.
மேற்சான்றிதழுக்குரிய அறிமுறை விரிவுரை எதிர்வரும் 03/07/2022 காலை 11.00 மணிக்கு தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தில் இடம்பெறும்.
அனைத்து மாணவர்களும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்சோலைத் தமிழியல் பட்டச்சான்றிதழுக்கு ஐரோப்பிய மட்டத்தில், தாய் மொழியிலும் மற்றும் வாழிடமொழியிலும் மேற்படிப்புகளை மேற்கொள்ளுவதற்கான அங்கீகாரத்தை பிரஞ்சு அரசு வழங்கியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஊடகப்பிரிவு )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here