பிரான்ஸின் பெரும் பகுதிகளில் அனல் வெப்பத்தை ஏற்படுத்திய பருவநிலை
இன்று ஞாயிற்றுக்கிழமை தணியத்
தொடங்கியுள்ளது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில 14 மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
எனினும் மத்திய மற்றும் வடகிழக்குப்
பகுதிகள் அடங்கிய 50 மாவட்டங்களில்
தொடர்ந்தும் வெப்பம் மற்றும் இடிமின்ன
லுடனான புயல் மழையை ஒட்டி செம்மஞ்சள் எச்சரிக்கை அமுலில் உள்ளது.
கடும் அனல் வெப்பம் நிலவிய சில
பகுதிகளில் நேற்றிரவு திடீரெனப் புயல் மழை பெய்துள்ளது. அதனால் வெப்பம்
தணியத் தொடங்கியுள்ளது. மழை, வெள்ளம், பலமான காற்றுடன் கூடிய
பருவநிலை இன்று பல பகுதிகளிலும்
காணப்படலாம் என்று வானிலை ஆய்வு
நிலையம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் இதற்கு முன்பு பதிவாகி வெப்ப அளவுகள் இந்த மாதம் முறியடிக்கப்பட்டுள்ளன என்று வானிலை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.Biarritz நகரில் பதிவாகிய 42.9°C ஆகக் கூடிய உச்ச வெப்ப நிலை ஆகும்.
நாட்டின் தென் மேற்கில் அதி கூடிய வெப்பம் பதிவாகிய நகரங்கள் :
🔵42.9°C à Biarritz
🔵41.8°C à Cazaux
🔵41.3°C au Cap Ferret
🔵41°C à Biscarosse
🔵40.2°C à Mont-de-Marsan
🔵40°C à Bordeaux-Mérignac
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
19-06-2022