18 ஜூன் – பிரெஞ்சு மக்களுக்கு முக்கியமான நாள் – 82 வருடங்களுக்கு முதல் 1940 ஆம் ஆண்டு – அந்த காலப்பகுதியில் பிரான்சு – ஜேர்மன் நாசி ஆட்சியாளர்களின் பிடிக்குள் இருந்த காலம்.
அந்த காலப்பகுதியில் பிரித்தானியாவில் இருந்து பிரான்சு தலைவர் – Charles de Gaulle வானொலியில் ஒலித்தது
“”La France a perdu une bataille! Mais la France n’a pas perdu la guerre” (“France has lost a battle, but France has not lost the war”)
பிரான்சு போர்க்களத்தில் ஒரு யுத்தத்தில் தோற்றுவிட்டது ஆனால் பிரான்சு போரை தோற்கவில்லை என்று அவர் பேச்சு இருந்தது.
அதன் பின் நடந்தது சரித்திரம்.
மே 2009 இல் எங்கள் ஆயுதப் போராட்டம் மவுனிக்கப்பட்டது – எங்கள் விடுதலைக்காக பல்லாயிரம் மாவீரர்கள் தங்கள் உயிர்களை கொடுத்தார்கள்.
எமது மக்கள் ஓர் இனப்படுகொலைக்குள் அழிக்கப்பட்டார்கள்.
2009 செப்டம்பர் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையில் ” முதல் பிரேரணை – சிறி லங்கா அரசுக்கு பயங்கரவாதத்தை அழித்ததுக்காக பாராட்டு பிரேரணை”
ஆனால், மனிதவுரிமை அமைப்புகள், தமிழ் அரசியல் கட்டமைப்புக்கள் – மனிதவுரிமை செயல்பாட்டாளர், எல்லோரும் ஓய்ந்து போகவில்லை .
நாடுகளை அணுகினோம் – சாட்சியங்களைத் தேடி ஒருங்கிணைத்தோம் –
அதன் பின் பல பிரேரணைகள் படிப்படியாக உருவெடுத்தன — வலுப்படுத்தப்பட்டன ..
ஆனால், இன்னும் எமது அரசியல் போர் – நீதிக்கான போர் முடிவுக்கு வரவில்லை ..
தொடர்கிறது …….
அதை சிதறடிக்க இந்த வருட மே 18 இனஅழிப்பு நாளை ஒட்டி ” ஹிந்து பத்திரிகையில் – விடுதலைப்புலிகள் தாக்குதல் செய்யப்போவதாக ஒரு செய்தி – அதை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு – வெளியிடுகிறது .
அதன் பின் பல பிரச்சினைகள்.
எமது மக்களுக்கு ஒரு செய்தி – இந்த நாளில்
எங்களை கோபப்படுத்த வேண்டும் – என்று – எங்களுக்குள் பிரிவை ஏற்படுத்துவதற்கு -பல வழிகளில் பல செயல்கள் நடைபெறுகின்றன.
ஒன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும் 2008 மாவீரர் நாளன்று எமது தேசிய தலைவர் எம்மிடம் அரசியல் போரை – கையெடுக்கும் படி உலகத் தமிழரிடம் கூறினார் .
எங்களின் ஒரு போர்க்களம் தான் முடித்து இருக்கிறது .
ஆனால் போர் முடியவில்லை .
நாம் சிந்தித்து செயற்படவேண்டும்.
நன்றி: திரு.திருச்சோதி