முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவம் பொது மக்களிடையே மோதல் பொதுமக்கள் தரப்பில் மூவர் காயமடைந்தனர். இராணுவத் தரப்பிலும் காயம் அடைந்தவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவது – இன்று காலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் பெற வந்தவர் (குறித்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டவர் ) எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள இராணுவ காவலரன் இராணுவத்தினருடன் முரண்பட்டபோது இராணுவத்தினர் குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறித்த நபர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் இராணுவத்தினர் அவருக்கு சிகிச்சையளித்து விட்டு இராணுவ காவலரணில் தடுத்து வைத்திருந்தனர்.
குறித்த நபரை விடுவிக்குமாறு அங்கே மாலை வந்த மக்கள் இராணுவத்தினரை கேட்டிருந்தனர்.எனினும் குறித்த நபரை இராணுவம் விடுவிக்கவில்லை.
பலத்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து அருகேயிருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குவிந்திருந்த ஏராளமான இளைஞரும் அங்கே திரண்டதை அடுத்து நிலைமை பதற்றமானது.
இராணுவம் மக்களைக் கலைக்க முற்பட்டது.
இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தாக்குதலுக்குள்ளான மக்கள் இராணுவத்தினரை சோடா போத்தல்கள் மற்றும் தடிகள் கொண்டு தாக்கினர்.
பதிலுக்கு இராணுவத்தினரும் தாக்கினர்.இருதரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்ததை அடுத்து இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
மக்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்காக இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து. மக்கள் கலைந்து சென்றனர்.தொடர்ந்து குறித்த பகுதியில் இராணுவம் பொலிஸார் குவிக்கப்பட்டு குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
வீதியில் போத்தல் உடைந்த தூள்கள் பரவி காணப்பட்டது.இராணுவம் தடிகள் ,மற்றும் துப்பாக்கிகளோடு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.இராணுவ வாகனம் மீதும் கல்வீசப்பட்டிருப்பதை காணமுடிகிறது.
இதன்போது குறித்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வருகை தந்து குறித்த பகுதியில் நடந்த சம்பவத்தை பார்வையிட்டு அங்கிருந்த மக்களுடனும் கலந்துரையாடி இருந்து குறிப்பிடத்தக்க விஷயம்
பல இளைஞர்கள் தாக்கப்பட்டு அவர்களின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது .மிக மோசமான சூழல், யுத்தம் நடைபெறும் பூமியாக காணப்படுகிறது எனத் தெரிவித்தார்.குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி: படங்கள் + செய்தி : நிதர்சன்