தமிழ் அரசியல் கைதி பார்த்தீபனின் தாயார் உயிரிழப்பு!

0
427

அரசியல் கைதி விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன்(குட்டி)அவர்களுடைய தாயார் நேற்றுமுன்தினம் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். பார்த்தீபன் 1996ஆம் ஆண்டு மத்தியவங்கி குண்டுவெடிப்போடு சம்மந்தப்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டு இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை.

26 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபனின் தாயாரான
வி.வாகீஸ்வரி அவர்கள் 15.06 2022, புதன் கிழமை இரவு இறைவனடி சேர்ந்தார்.

📍மகன் பார்த்தீபன்
▪️1996 – 19 வயதில் கைது.
▪️2017 – யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவரப்பட்டார்- தந்தையின் மரணச்சடங்கில் கலந்துகொண்டு இறுதிக் கடமைகளை செய்ய ஒரு மணித்தியாலம் அனுமதி வழங்கப்பட்டது.

26 வருடங்கள் சிறை வாழ்க்கை- தற்போது சிறையில் உள்ள அரசியல் கைதிகளில் சிறுவயதில் கைதுசெய்யப்பட்டவரும், அதிகூடிய வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த கைதியும் இவர்தான்.

குடும்பத்துடன் இருந்த நாட்களை விட சிறையில் இருந்த நாட்களே அதிகம் எனவே பொதுமன்னிப்பு அளித்து அவரை விடுவிக்க வேண்டும் என இவரின் தாயார், அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்துவந்தார்.
தான் இறப்பதற்கு முன் மகனை காணவேண்டும் என ஆவலாய் இருந்த இவர் தன் பிள்ளையின் திருமுகம் காணாமலே மறைந்துவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here