பிரான்ஸ்: பல பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை; வெப்பம் 40 பாகை தாண்டி உயர்வு!

0
228

12 மாவட்டங்களில் மாணவர்கள்
வீடுகளில் தங்கியிருக்க அனுமதி

முதியோர், நோயாளிகள்,சிறார்களை
விழிப்புடன் கண்காணிக்க அறிவுரை

வெப்ப வாதத்தை ஏற்படுத்தக் கூடிய
அளவில் அனல் வெப்ப நிலை உயர்ந்துள்ளதால் ஒவ்வொருவரும்
தங்கள் உடல் நலனில் விழிப்புடன் இருக்குமாறு அரசு கேட்டிருக்கிறது.
குறிப்பாகத் தனித்து வசிக்கும் மூதாளர்கள், கடும் நோயாளிகள், உடற்பலவீனமானவர்களை விழிப்புடன்
கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டி
ருக்கிறது. வெப்ப அனர்த்தத்தில் பாதிக்கப்பட நேர்ந்தால் உடனே தொடர்பு கொள்வதற்கான அவசர சேவை(“Canicule info service”) இலக்கம் (0800 06 66 66) அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வழமைக்கு மாறான வெப்ப அனல் நாட்டின் பல பகுதிகளைத் தாக்கத்
தொடங்கியுள்ளது. தென்மேற்குப் பகுதியில் 12 மாவட்டங்களில் சிவப்பு
எச்சரிக்கையும்(vigilance rouge) 24 மாவட்டங்களில் செம்மஞ்சள் (vigilance orange) எச்சரிக்கையும் விடுக்கப்பட்
டிருக்கிறது. பாரிஸ் பிராந்தியத்தின்
எந்த மாவட்டங்களும் இவ்விரு எச்சரிக்கைச் சுட்டிகளுக்குள்ளேயும் அடங்கவில்லை. நாட்டின் தெற்கு, தென்மேற்குப் பிராந்தியங்களையே வெப்ப அனல் உச்ச அளவில் தாக்கியுள்ளது.

Tarn, Haute-Garonne, Gers, Tarn-et-Garonne, Lot-et-Garonne, Landes, Gironde, Charente, Charente-Maritime, Deux-Sèvres, Vienne மற்றும் Vendée ஆகிய சிவப்பு எச்சரிக்கை
மாவட்டங்களில் பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளை இன்று வெள்ளிக்கிழமை
பாடசாலைகள், கல்லூரிகளுக்கு அனுப்பு
தல் கட்டாயம் அல்ல என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மைதான
விளையாட்டு நிகழ்வுகள், திறந்த வெளி
களில் நடைபெறும் பொது நிகழ்வுகள்
அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

பிரான்ஸில் கனிகூல் (Canicule) என்று

அழைக்கப்படுகின்ற நம்மூர் “காண்டாவன” வெப்ப அலை இந்த ஆண்டு கடும் கோடைப் பருவத்துக்கு முன் கூட்டியே நாட்டைப் பாதித்துள்ளது.

     -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                         17-06-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here