ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30 வது அமர்வு இன்று (14) திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
அமர்வின் முதல் நாளான இன்று இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இதில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ‘இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல்’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துவார்.
ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் 30 வது அமர்வு இன்று முதல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 02 ஆம் திகதி வரை நடைபெறும்.
இந்த அமர்வில் கலந்துகொள்ளுவதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்று ஜெனீவா சென்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனா திராஜா, சுமந்திரன் தலைமையில் சட்டத்தரணிகள் குழுவொன்றும் ஜெனீவா பயணமாகியுள்ளது.

ஐ. நாவுக்கான இலங்கையின் வதி விடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க அமர்வின் ஏனைய செயற்பாடுகளை பொறுப்பேற்று முன்னெடுத்துச் செல்வார்.
ஐ. நா மனித உரிமைகள் ஆணை யாளர் அலுவலகத்தினால் இலங் கையின் மனித உரிமைகள் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதியன்று மனித உரிமைகள் பேரவையில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்படும்.
மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் சம்பிரதாயப்படி இலங்கை மீதான அறிக்கையின் பிரதி, அரசாங்கத்திடம் ஒப்படை க்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு எழுத்து மூலமான பதிலை வழங்குவதற்காக வெளிவிவகார அமைச்சு ஐந்து நாட்கள் கால அவகாசம் கோரியிருப்பதாகவும் ஜெனீவா தகவல்கள் தெரிவிக் கின்றன.
ஆனாலும் இது குறித்து வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான சத்யா ரொட்ரி§ காவை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் அதனை முற்றாக மறுத்தார்.
அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் பெயர் குறிப்பிடாத நிலையில் படை வீரர்கள் பயங்கரவாதிகள் மற்றும் முன்னாள் அரசாங்கம் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இலங்கையின் உள்ளக விசாரணைக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா இந்த அமர்வில் பிரேரணயொன்றை முன்வைக்கப் போவதாக அண்மையில் இலங்கை வந்திருந்த தெற்காசிய பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிள்வால் கூறிச் சென் றார்.
அந்தவகையில், அமெரிக்கா, இலங் கைக்கு சாதகமாகவே இம்முறை செயற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பிரேரணையொன்று முன் வைக்கப்பட்டால் நிகழ்ச்சி நிரலின்படி ஒக்டோபர் 01 மற்றும் 02 ஆகிய தினங் களில் அது விவாதத்துக்கு எடுத்துக்கொள் ளப்படும்.
சுவிட்சர்லாந்து நேரப்படி இன்று காலை 9 மணிக்கு இந்த அமர்வு ஆரம்பமாகும். மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜோச்சிம் ரூக்கர் சிறு குறிப்புரையுடன் அமர்வை தொடங்கி வைப்பார்.
அதனைத் தொடர்ந்து ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் ஹெய்ட் அல் ஹுசைன் உரையாற்றுவார். இவரது உரையில் அனைத்து உலக நாடுகளினதும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து தெரிவிக்கப்படும். இதன்போது நிச்சயம் இலங்கை தொடர்பிலும் அவர் குறிப் பிடுவார்.
இன்று நடக்கும் ஆரம்ப கூட்டத்தில் அமைச்சர் மங்கள சமரவீர, பிரிட்டன் மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சரான ஹியுகோஸ்வேயார் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.
அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை யும் அதன் முன்னெடுப்புக்களையும் பிர திபலிப்பதாக அமையுமென நம்பப் படுகிறது.
ஐ. நா மனித உரிமைகள் ஆணை யாளர் அலுவலகத்தினால் இலங் கையின் மனித உரிமைகள் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதியன்று மனித உரிமைகள் பேரவையில் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்படும்.
மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் சம்பிரதாயப்படி இலங்கை மீதான அறிக்கையின் பிரதி, அரசாங்கத்திடம் ஒப்படை க்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு எழுத்து மூலமான பதிலை வழங்குவதற்காக வெளிவிவகார அமைச்சு ஐந்து நாட்கள் கால அவகாசம் கோரியிருப்பதாகவும் ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் இது குறித்து வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான சத்யா ரொட்ரி§ காவை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் அதனை முற்றாக மறுத்தார்.
அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் பெயர் குறிப்பிடாத நிலையில் படை வீரர்கள் பயங்கரவாதிகள் மற்றும் முன்னாள் அரசாங்கம் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இலங்கையின் உள்ளக விசாரணைக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா இந்த அமர்வில் பிரேரணயொன்றை முன்வைக்கப் போவதாக அண்மையில் இலங்கை வந்திருந்த தெற்காசிய பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிள்வால் கூறிச் சென்றார்.
அந்தவகையில், அமெரிக்கா, இலங் கைக்கு சாதகமாகவே இம்முறை செயற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டால் நிகழ்ச்சி நிரலின்படி ஒக்டோபர் 01 மற்றும் 02 ஆகிய தினங் களில் அது விவாதத்துக்கு எடுத்துக்கொள் ளப்படும்.