ஐரோப்பிய நீதிமன்றத் தலையீடே காரணம்!
றுவாண்டாவுக்கு முதல் தொகுதி புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்
செல்லவிருந்த பிரிட்டிஷ் விமானத்தின் பயணம் கடைசி நிமிடத்தில் ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது.
பிரான்ஸைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம்(European Court of Human Rights – ECHR) வழங்கிய ஒர் உத்தரவை அடுத்தே
அகதிகளது விமானப்பயணம் ரத்தாகி
யிருக்கிறது.இந்த விவகாரத்தில் பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் ஒர் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் வரை புகலிடக்
கோரிக்கையாளர்களைக் கிஹாலிக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை தாமதப்படுத்தப்படவேண்டும் என்று
ஐரோப்பிய நீதிமன்றம் கேட்டிருக்கிறது.
பொறிஸ் ஜோன்சன் அரசின் சர்ச்சைக்குரிய புகலிடக் கொள்கைக்கு
ஐரோப்பிய நீதிமன்றத்தின் இந்தத் தலையீடு ஒரு பின்னடைவு என்று கருதப்
படுகிறது. எனினும் உள்துறை அமைச்சர்
பிரதீ பட்டீல், அடுத்த விமானம் கிஹாலி
புறப்படுவது உறுதி என்று தெரிவித்திருக்கிறார்.ஐரோப்பிய நீதிமன்றத்தின் தலையீடு குறித்து பிரிட்டிஷ் அரசு அதிர்ச்சியும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஷ் அரசு றுவாண்டா அரசுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் படி சட்டவிரோதமான வழிகளில் பிரிட்டனுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோர் இனிமேல் கிஹாலிக்கு
அனுப்பிவைக்கப்பட்டு அங்குள்ள விசேட
வதிவிடங்களில் தங்கவைத்தே பராமரிக்கப்படவுள்ளனர். இந்தத் திட்டத்துக்கு உள்நாட்டிலும் சர்வதேச
மட்டங்களிலும் கடும் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
15-06-2022