பிரான்சில் தமிழ்த்தேசிய நீரோட்டத்தில் இணைய இளையோர்கள் ஆர்வம்!

0
525

பிரான்சில் தமிழ்ச்சோலைகளின் தேர்வர்களாகவும் தனித்தேர்வர்களாகவும் *வளர்தமிழ் 12 நிறைவுசெய்த இளந்தலைமுறையினரை * தமிழ்த்தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான வழிகாட்டு விளக்க ஒன்றுகூடல் கடந்த 04.06.2022 சனிக்கிழமை அன்று பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு மண்டபத்தில் தேர்வின் நிறைவின் போது இடம்பெற்றது.
இளந்தலைமுறையினர் *எதிர்காலத்தில் ஆற்றக்கூடிய தேசியக் கடமைகள் மற்றும் கற்கைநெறி தொடர்பான விளக்கங்கள் * இந்த ஒன்றுகூடலில் வழங்கப்பட்டன.


இளந்தலைமுறையினர் தமிழ்ச்சங்கங்களில் பொறுப்புக்களைப் பெற்று இயங்குவதனூடாக தமிழ்த்தேசிய அரசியலில் பிரெஞ்சு நகரசபை மட்டத்திலும் கிடைக்கக்கூடிய பரஸ்பர அனுகூலங்கள் பற்றியும், தனிப்பட்ட ரீதியில் பெற்றுக்கொள்ளும் சமூக, பொருண்மிய, தகைமைசார் நன்மைகள் தொடர்பாக *கொலம்பஸ் தமிழ்ச்சங்கத்தின் இளந்தலைமுறைத் தலைவர் நிதிபன் * அவர்கள் விரிவான விளக்கத்தை வழங்கியிருந்தார்.
வளர்தமிழ் 12 நிறைவுசெய்த மாணவர்கள் தமிழ்ச்சோலைகளில் தமிழாசிரியர்களாக கடமையாற்றுவது தொடர்பாகவும் அதனால் தமிழ்மொழிக்கும் மாணவர்களுக்கும் ஏற்படும் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கடந்த 4 ஆண்டுகளாக தமிழாசிரியையாக கடமையாற்றுபவரும் தமிழியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவருமாகிய இளந்தலைமுறை தமிழாசிரியை செல்வி நேதிரா இந்திரஜித் விளக்கியிருந்தார்.
தமிழை இரண்டாம் மொழியாகக் கற்று வெளியேறும் இளையோருக்கு தமிழியல் இளங்கலைமாணிப் பட்டப்படிப்பு (BA) தொடர்பாக, அப்பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் *செல்விகள் லிஷானி மனோகரன், மீனாட்சி ஜெயக்குமார் * ஆகியோர் வழங்கியிருந்தனர்.

பட்டநெறியை கற்பதால் பிரான்சில் மேற்கொள்ளக்கூடிய பட்டமேற்படிப்புகள் மற்றும் தொழில்சார் அனுகூலங்களைப் பற்றி விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. இளையோர் அமைப்புகளில் இணைந்து பணியாற்ற இளையோருக்கு அழைப்பு விடுத்த இளந் தலைமுறை ஆசிரியரும் பட்டகருமான செல்வன் தவராசா சஞ்சித், அதனால் பிரஞ்சு அரசமட்டத்தில் ஏற்படுத்தக்கூடிய செல்வாக்கு பற்றியும் விளக்கியிருந்தார்.
முழுவதும் இளையோரால் வழங்கப்பட்ட விளக்கங்களை தேர்வர்கள் உற்சாகமாகக் கேட்டறிந்ததோடு ஐயங்களையும் கேட்டு தெளிவுபெற்றனர். தமிழ் மொழிக்கும் இனத்திற்குமான தொடர்ச்சியான பங்களிப்பிற்கும் தமிழியல் பட்டப்படிப்பை மேற்கொள்ளவும் பெரும்பாலான மாணவர்கள் உறுதிமொழிகளை வழங்கிச்சென்றனர்.

‘’இளையோரிடம் கையளித்தல்’’ எனும் தேசியத் தலைவரின் கோட்பாட்டிற்கிணங்க தேசிய நீரோட்டத்தில் இளையோரை இணைக்கும் இந்நிகழ்வு ஒரு பெரும்பாய்ச்சலாகக் கருதமுடியும்.


இதேவேளை *புதிதாக தமிழியல் பட்டப்படிப்பில் (BA) * இணைவோருக்கான வரவேற்பு நிகழ்வொன்று எதிர்வரும் 19.06.2022ஞாயிறு அன்று மாலை 15.00 மணியளவில் *தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக கேட்போர்கூடத்தில் * நடைபெறவுள்ளதாகத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here