மக்கா பள்ளிவாசலில் பாரந்தூக்கி சரிந்து வீழ்ந்ததில் 107 பேர் மரணம்: 230 பேர் காயம்!

0
147

மக்கா பள்ளிவாசலில்சவூதி அரே­பி­யாவின் மக்­கா வில் உள்ள அல் ஹரம் பள்­ளி­வா­சலில் பாரந்­தூக்கி (கிரேன்) ஒன்று சரிந்து வீழ்ந்­ததில் 107 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

உயி­ரி­ழப்பின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கலாம் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பலத்த காற்­றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் மஸ்­ஜிதுல் ஹரமின் மசாஆ பகுதி கூரை திருத்தப் பணி­களில் ஈடு­பட்­டி­ருந்த பாரம் தூக்கி ஒன்றே சரிந்து வீழ்ந்­துள்­ளது.

இம்­மாதப் பிற்­ப­கு­தியில் ஹஜ் யாத்­திரை தொடங்­க­வி­ருக்கும் நிலையில் இந்த விபத்து நடந்­துள்­ளமை மக்கள் மத்­தியில் பெரும் பீதியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இவ்விபத் தில் 230 க்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

ஜோதிட கணிப்­பின்­படி சில நாட்­களை, திக­தி­களை அதிர வைக்கும், உல­கத்தை உலுக்கும் சம்­ப­வங்கள், நிகழ்­வுகள் ஏற்­படும் என்று கணிப்­பர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர். இந்­நி­லையில், இந்தச் சம்­பவம் உலகை உலுக்­கி­யுள்­ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு செப்­டெம்பர் 11ஆம் திகதி இதே நாளில் தான் உலக வல்­ல­ர­சான அமெ­ரிக்­காவை ஆட்டம் காண வைத்­தது. அதா­வது, ஒஸாமா பின்­லேடன் தலை­மை­யி­லான அல்­கைதா இயக்­கத்­தினர் அமெ­ரிக்­காவின் இரட்டைக் கோபு­ரத்தின் மீது தாக்­குதல் நடத்­தினர்.இதில், மூவா­யி­ரத்­திற்கும் அதி­க­மான மக்கள் உயி­ரி­ழந்­தனர்.

இந்த நாளை இன்று வரை அமெ­ரிக்கா துக்க நாளாக அனுஷ்­டித்­து­வ­ரு­கின்­றது. அதே­போன்று 2012 ஆம் ஆண்டு செப்­டெம்பர் 11 இல் பாகிஸ்­தானில் இரு அரச அலு­வ­ல­கங்கள் மீது ஏற்­பட்ட திடீர் தீ விபத்தில் 315 மக்கள் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தனர்.

இந்­நி­லையில், நேற்று முன்­தினம் சவூதி அரே­பி­யாவில் இன்­னொரு சோகச் சம்­பவம் நேர்ந்­துள்­ளது. இந்தச் சோகச் சம்­பவம் இப்­பொ­ழுது உலகம் முழு­வதும் பேசப்­படும் முக்­கிய செய்­தி­யாக மாறி­யுள்­ளது.

பள்­ளி­வாசல் விரி­வாக்கம் மக்­காவில் புனித யாத்­தி­ரி­கர்கள் கூட்ட நெரிசல் ஏற்­பட்டு கடந்த 2006 ஆம் ஆண்டு பெரும் விபத்து ஏற்­பட்­டது. இதில் 300 பேர் வரை­யி­லானோர் உயி­ரி­ழந்­தனர். அத்­துடன் 2004 ஆம் ஆண்டு நடை­பெற்ற நெருக்­க­டியில் 200 பேர் வரையில் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து மெக்­காவில் ஆண்­டு­தோறும் அனு­ம­திக்­கப்­படும் புனித யாத்­தி­ரி­கர்­களின் எண்­ணிக்­கையை சவூதி அரசு கண்­கா­ணிக்கத் தொடங்­கி­யது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here